03 November 2025

இந்த ஆண்டு முழுவதும் காத்து வந்தீர்

இந்த ஆண்டு முழுவதும் காத்து வந்தீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          இந்த ஆண்டு முழுவதும் காத்து வந்தீர்

            உம்மை நன்றியால் துதித்திடுவேன்

            எந்தன் வாழ்வில் செய்திட்ட நன்மைகளை

            சொல்லி என்றுமே துதித்திடுவேன் - 2

 

            கடந்த நாட்கள் முழுவதும் காத்து வந்தீர்

            உம்மை நன்றியால் துதித்திடுவேன்     

            எந்தன் வாழ்வில் செய்திட்ட நன்மைகளை

            சொல்லி என்றுமே துதித்திடுவேன்

 

                        இயேசுவே நீர் வல்லவரே

                        எந்தன் வாழ்வில் நல்லவரே - 2

                        நீர் தந்திட்ட உந்தன் கிருபைகளை

                        என்றும் எண்ணி துதித்திடுவேன் - 2

 

1.         பாதைகளெல்லாம் செவ்வையாக்கினீர்

            வாதைகள் இன்றி காத்து வந்தீர் - 2

            வருஷத்தை நன்மையால் முடிசூட்டி

            பாதைகள் நெய்யாய் பொழியச் செய்தீர் - 2 -இயேசுவே

 

2.         ஆபத்து அணுகாமல் காத்து வந்தீர்

            அனுகூல துணையாய் உடன் இருந்தீர் - 2

            தேவைகள் அனைத்தும் சந்தித்தீரே

            அற்புதமாய் என்னை நடத்தினீரே - 2 - இயேசுவே

 

3.         சோதனை நேரத்தில் ஜெயம் தந்தீரே

            சோர்ந்திடா உள்ளமும் பெலன் தந்தீரே - 2

            காத்திருந்து ஜெபிக்க செய்தீர்

            செட்டைகள் அடித்து எழும்ப செய்தீர் - 2 -இயேசுவே

 

4.         பரிசுத்த ஆவியால் நிரப்பினீரே

            சத்திய பாதையில் நடத்தினீரே - 2

            ஆவியின் வரங்களை வெளிப்படுத்தி

            அற்புத அதிசயம் செய்தீரே - 2 - இயேசுவே

 

 

 

- Rev. D. Jebaraj

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...