யார்
உன்னை மறந்தாலும்
இயேசு
உன்னை மறப்பதில்லை
உன் தந்தை
தாயும் மறந்தாலும்
இயேசு
உன்னை மறப்பதில்லை
- 2
1. துன்ப துயரங்கள்
வாழ்வில் வந்தாலும்
துளியும்
பயமில்லையே
நிந்தை
நாள்தோறும் நெருங்கி
வந்தாலும்
இதயத்தில்
கலக்கமில்லை
உன் கண்ணீர்
களிப்பாக மாறுமே
உன் கவலை
எல்லாமே தீருமே
- 2
நம் இயேசுவின்
நாமத்திலே - (2) - யார்
2. பாடு பலவீனம்
எதுவும் வந்தாலும்
விடுதலை
தந்திடுவார்
மனது பாரங்கள்
நெருக்கும் வேலையில்
வேண்டுதல்
கேட்டிடுவார்
உன் தோல்வி
ஜெயமாக மாறுமே
உன் வாழ்வு
சந்தோசம்
ஆகுமே - 2
நம் இயேசுவின்
நாமத்திலே
- (2) - யார்
3. நமது எதிர்
காலம் நேசர் இயேசுவின்
கரங்களில்
இருகின்றது
மனது தேவனின்
தூய ஆவியால்
மகிழ்ந்தே
துதிக்கிறது
இனி வாதை
நம் வாழ்வில் இல்லையே
நாம்
பயந்து வாழ்வதும்
இல்லையே - 2
நம் இயேசுவின்
நாமத்திலே - (2) - யார்
No comments:
Post a Comment