01 November 2025

சின்ன சின்ன பாலகா இயேசு நாயகா

சின்ன சின்ன பாலகா இயேசு நாயகா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          சின்ன சின்ன பாலகா இயேசு நாயகா

            உன் மான் விழிகள் மூடித் தூங்கு இயேசு பாலகா

 

                        ஆரிராராரோ ஆரிராராரோ - 2

 

1.         வாடை தாங்க இங்கே கந்தைகள் உண்டு

            மேடையாக இங்கே புல்லணை உண்டு - 2

            தங்க தொட்டிலாக அன்னை மடி உண்டு - (2)

            தங்கமே நீ கண்ணுறங்கு ஆரிராராரோ - (2)   - சின்ன சின்ன பாலகா

 

2.         ஆ இனங்கள் இங்கே கீதம் பாடிட

            துள்ளியோடும் ஆடு தாளம் மீட்டிட - 2

            வான் பறவை பாட கான மயில் ஆட - (2)

            வானவனே கண்ணுறங்கு ஆரிராராரோ - (2) - சின்ன சின்ன பாலகா

 

3.         பாவம் போக்க வந்த பாச தீபமே

            பார்தலத்தை மீட்க வந்த நேசமே - 2

            கந்தை கோலமாக மண்ணில் வந்த ராஜா - (2)

            கண்மணியே கண்ணுறங்கு ஆரிராராரோ - (2) - சின்ன சின்ன

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...