மாறாத அன்பு என் இயேசுவின் அன்பு

மாறாத அன்பு என் இயேசுவின் அன்பு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

மாறாத அன்பு என் இயேசுவின் அன்பு

மாசற்ற அன்பு என் நேசரின் அன்பு - 2

 

நன்றி பலிகளை நான் செலுத்திடுவேன்

இயேசுவுக்காவே நான் வாழ்ந்திடுவேன் - 2

 

1. சிலுவையின் அன்பிலே என்னை பெற்றெடுத்தீரே

சிலுவையின் இரத்தத்தால் என்னை பாதுகாத்தீரே - 2

மரணத்தை மாற்றி உம் ஜீவன் தந்தீரே

மன்னிப்பை தந்து என்னை வாழ வைத்தீரே - 2

 

2. உள்ளங்கையில் என்னை வரைந்து வைத்தீரே

உலகத்தை ஜெயித்து என்னோடு வாழ்பவரே - 2

தயவுள்ள தகப்பனே என் ஆத்ம நேசரே

தாய் போல் என்னை தேற்றி உம் இதயத்தில் சுமந்தீரே - 2

 

3. உயிர்த்தெழுந்த வல்லமையை எனக்குள் வைத்தீரே

உம் அன்பிற்கீடாய் என்னையே தருகிறேன் - 2

நித்திய ஜீவனை தருவேன் என்றீரே

வாடாத கிரீடம் எனக்காய் தருபவரே - 2

 

 

- Daphne R Jennifer

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே