எனக்காக வந்தவரே வாழ்ந்து காட்டினீரே

எனக்காக வந்தவரே வாழ்ந்து காட்டினீரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          எனக்காக வந்தவரே

            வாழ்ந்து காட்டினீரே

            என் இயேசு ராஜனே

            எங்கள் முன்னோடியே - 2

 

                        உம் கிருபை தாருமே

                        உம்மை அறிந்தோர்க்கும்

                        அறியாதோர்க்கும்

                        முன்மாதிரியாய் இருக்க

                        உம் கிருபை ஊற்றுமே - 2

 

1.         ஆவியில் குருடனாய் நடந்ததை

            நான் எண்ணி பார்க்கின்றேன்

            பார்வை அடைய செய்து

            உம் ஆவியை ஊற்றி சுத்திகரித்தீரே

            உம்மை விசுவாசித்து வாழ கற்றுக் கொடுத்தீரே - (2)- உம் கிருபை

 

2.         என்னை அழைத்த உம் அன்பை

            நான் எண்ணி பார்க்கின்றேன்

            எனக்காக ஜீவன் தந்த

            உம் அன்பை எண்ணி வாழுகின்றேன்

            உம் அன்பை காண்பிக்க வாழுகின்றேன் - (2) - உம் கிருபை

 

3.         என்னை அழைத்த உம் வார்தையை

            நான் எண்ணி பார்க்கின்றேன்

            என்னை வாழ்விக்கும் உம் வார்த்தையை

            நான் நினைத்து உம்மை போற்றுகின்றேன்

            உம் வார்தையை சொல்ல வாஞ்சிக்கின்றேன் - (2) - உம் கிருபை

 

 

- Thomas Naveen

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே