எப்பிராத்தா என்ற பெத்லகேமே

எப்பிராத்தா என்ற பெத்லகேமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

எப்பிராத்தா என்ற பெத்லகேமே

யூதேயாவில் நீ சிறியதல்ல

இஸ்ரவேலை ஆளும் ராஜா

உன்னிடமிருந்து புறப்படுவார் - 2

 

இரட்சகர் வந்தாரே

இரட்சிப்பை தந்தாரே

இரட்சண்ய நாள் இதுவே - 2

 

1. ஈசாயின் அடிமரத்தில் துளிர் தோன்றிற்றே

வேரினின்று கிளை ஒன்று எழும்பி செழிக்குமே

கர்த்தரின் ஆவி அவர் மேலிருப்பாரே

ஞானத்தையும் அறிவையும் அவர் அருள்வாரே

 

அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே

சமாதான பிரபுவே பிறந்திட்டாரே - 2 - இரட்சகர்

 

2. நீதிபடி ஏழைகளை நியாயம் தீர்த்திடும்

நீதியுள்ள தேவனவர் வந்து விட்டாரே

நீதியின் செங்கோல் அவர் கையிலிருக்கும்

நித்திய மாட்சி அவர் மேலே இருக்கும்

 

நித்திய பிதாவே நிமல ரூபனே

நீதியின் மீட்பரே பிறந்திட்டாரே - 2 - எப்பிராத்தா

 

 

- Nimmi Joe

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே