விண்ணோர் போற்றவே மண்ணோர் வாழ்த்தவே
விண்ணோர்
போற்றவே மண்ணோர்
வாழ்த்தவே
விந்தை
பாலனாய் பிறந்தாரே
ஞானிகள்
மகிழவே சாஸ்திரிகள்
வணங்கவே
தூதர்கள்
பாடிட பிறந்தாரே
- 2
எந்தன்
நண்பனாய் ஆத்ம
மணாளனாய்
தூயாதி
தூயராய் என் இயேசு
பிறந்தாரே - 2
1. ஏழை
என் உள்ளத்தில்
இன்று பிறப்பீரோ
பிறப்பீரோ
ஏக்கமெல்லாம்
நீர் தீர்ப்பீரோ
- 2
ஏங்கித்
தவிக்கின்றேன்
என் நேசர் முகம்
காண
ஏனோ
மாற்றங்கள் உள்ளத்திலே
- 2 - எந்தன்
2. ஆழியில்
அமிழும் என்னை
நினைப்பீரோ நினைப்பீரோ
ஆசையாய்
தூக்கி என்னை சுமப்பீரோ
- 2
ஆறா காயங்கள்
என் பாவ தோசங்கள்
ஆற்றி
தேற்றிடவே பரிகாரியாய்
வந்தீரே - 2 - எந்தன்
- Angelena Mathias, Deva Bifrin
Comments
Post a Comment