கனவு தோன்றும் வேளையில்

கனவு தோன்றும் இராவினில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          கனவு தோன்றும் வேளையில்

            கடவுள் தோன்றினார்

            விழிகள் தூங்கும் இராவினில்

            விமலன் தோன்றினார் - 2

 

                        ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ

 

1.         பனி மூடும் இரவு இறை மைந்தன் வரவு

            பேரன்பின் பேரின்பமோ

            இறை தூதர் பாடல் மனசெல்லாம் சாரல்

            மண்மீது வான் என்பதோ - 2

 

            குயில் போல ஓசை குழல் போன்ற பாஷை

            இசைபாடும் சேனைகளோ

            சுதியோடு பாடல் துதியோடு தேடல்

            குரலெல்லாம் வீணைகளோ

 

                        என் அழகே! அழகே! உமைப் பாடுவேன்

                        என் அமுதே! அமுதே! உமைப் போற்றுவேன் - 2

                        உமை வாழ்த்துவேன் - கனவு

 

2.         தீர்க்கர்கள் கனவோ கனவெல்லாம் நனவோ

            நம் தேவன் மண் மீதிலோ

            நீகழ்காலம் வரமோ எதிர்காலம் வளமோ

            மனுவேலன் நம் பூவிலோ - 2

 

            புதிதான வேதம் புதிதான கீதம்

            புதிதான ஆரம்பமோ

            இனியில்லை பாவம் இனியில்லை சாபம்

            இயேசுவால் ஆனந்தமோ

 

                        என் அழகே! அழகே! உமைப் பாடுவேன்

                        என் அமுதே! அமுதே! உமைப் போற்றுவேன் - 2

                        உமை வாழ்த்துவேன் - கனவு

           

 

- Dr. V.C. Amuthan

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே