எங்கே இருக்கிறாய்

எங்கே இருக்கிறாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   எங்கே இருக்கிறாய், நீ எங்கே இருக்கிறாய்,

                        உன் இயேசு உன்னை அழைக்கிறார்

                        நீ எங்கே இருக்கிறாய் - 2

 

1.         நீ தேவ சொல்லை மீறி நடந்தாயோ,

            கடும் பாவ சேற்றில் ஊறி கிடந்தாயோ - 2

            உனக்காக சிலுவை சுமந்தவர்,

            தம் இரத்தத்தாலே மீட்டவர் - 2

            உன் பாவம் கழுவ அழைக்கிறார் இதோ - (2)

 

                        எங்கே இருக்கிறாய், நீ எங்கே இருக்கிறாய்,

                        தேவ பிரசன்னத்தை நோக்கி ஓடி வா,

                        எங்கே இருக்கிறாய், நீ எங்கே இருக்கிறாய்,

                        தேவ சமூகத்தை நோக்கி ஓடி வா,

                        அந்த சிலுவை மரத்தை நோக்கி ஓடி வா,

                        தம் ஜீவன் கொடுத்த இயேசு அழைக்கிறார்.

 

2.         நீ தேவ சமூகம் விலகி போனாயோ,

            அவர் சத்தம் கேட்டு ஓடி ஒழிந்தாயோ - 2

            உன்னோடு பேச விரும்பியே,

            தேடி ஓடி வந்தவர் - 2

            தம் அன்பின் ஆழம் அறிய அழைக்கிறார் - (2)

 

                        எங்கே இருக்கிறாய், நீ எங்கே இருக்கிறாய்,

                        தேவ பிரசன்னத்தை நோக்கி ஓடி வா,

                        எங்கே இருக்கிறாய், நீ எங்கே இருக்கிறாய்,

                        தேவ சமூகத்தை நோக்கி ஓடி வா,

                        அந்த சிலுவை மரத்தை நோக்கி ஓடி வா,

                        தம் ஜீவன் கொடுத்த இயேசு அழைக்கிறார்.

 

                        உன் தகப்பன் வீட்டை நோக்கி

                        நீ திரும்பி வா,

                        உன் தாயின் கருவில் அறிந்தவர்

                        உன்னை அழைக்கிறார் - 2 - எங்கே இருக்கிறாய்

 

 

- Kingston Paul

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே