கர்த்தர் என்னை நித்தமும் நடத்திடுவார்

கர்த்தர் என்னை நித்தமும் நடத்திடுவார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

கர்த்தர் என்னை நித்தமும் நடத்திடுவார்

மகா வறட்சியில் ஆத்துமாவை திருப்தியாக்குவார்

மகா வறட்சியில் ஆத்துமாவை செழிப்பாக்குவார்

 

என் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்

வற்றாத நீரூற்றாய் மாற்றிடுவார் - 2

நீர் பாய்ச்சலானத் தோட்டத்தை போலாக்குவார்

 

வற்றாத நீரூற்றாய் மாற்றிடுவார்

நீர் பாய்ச்சலானத் தோட்டத்தை போலாக்குவார்

 

1. உழைப்பின் பலனை உண்ணச் செய்வார்

நன்மைகள் வாழ்வில் நிகழ செய்வார்

தலைமுறைகளை காணச் செய்து

நலமும் அமைதியும் பெருகச் செய்வார் - 2

 

ஆண்டவருக்கு அஞ்சி நடப்போம்

அவர் வழி நடந்து வாழ்ந்திருப்போம் - 2

நாம் இஸ்ரவேலின் சமாதானம் சுதந்தரிப்போம்

 

அவர் வழி நடந்து வாழ்ந்திருப்போம்

நாம் இஸ்ரவேலின் சமாதானம் சுதந்தரிப்போம்

 

 

2. வாழ்வின் பயணம் முடிந்திடுமே

முடிவில் துவக்கம் பிறந்திடுமே

இயேசுவை நம்பும் யாவருக்கும்

நம்பிக்கை வாழ்வில் நிலைத்திடுமே - 2

 

கர்த்தருடைய நித்திய வீட்டில்

ஆனந்தமாய் அவருடனிருப்போம் - 2

நாம் எல்லையில்லா வாழ்வை சுதந்தரிப்போம்

 

ஆனந்தமாய் அவருடனிருப்போம்

நாம் எல்லையில்லா வாழ்வை சுதந்தரிப்போம்

 

 

- Eva. David Vijayakanth

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே