வானிலே தேவ தூதர்கள் பாட
வானிலே
தேவ தூதர்கள் பாட
பூமியில்
எங்கும் அமைதி
உண்டாக
புன்னகை
நம்மை சூழ்ந்திட
இசை
தாளம் போட்டு மகிழ்ந்து
ஆடி
கிறிஸ்மஸ்
வாழ்த்துகள் கூறுவோம்
நம் இரட்சகர்
பிறந்தாரே - 3
1. கன்னி
மரியின் மைந்தனாய்
யூதர்
இனத்தில் உதித்தாரே
கந்தை
தொட்டிலில் புல்லணை
மெத்தையில்
மாடடை குடிலில்
பிறந்தாரே
விண்மீன்
வழி காட்டிடவே
ஞானிகள்
மூவர் வந்தனரே
பொன்
வெள்ளி தூபம் காணிக்கைத்
தந்து
பாலனை
பணிந்து வணங்கினரே
- கிறிஸ்மஸ்
2. வான
தூதர் துதி கேட்டு
மேய்பர்களும்
விரைந்தனரே
புல்லணை
மீது மன்னனைக்
கண்டு
உள்ளம்
மகிழ்ந்து பணிந்தனரே
புதிய
பாடல் பாடியே
பாலனை
வாழ்த்தி மகிழ்வோமே
துன்பங்கள்
நீக்கி துயரங்கள்
போக்கி
அன்பும்
அமைதியும் தருவாரே
- கிறிஸ்மஸ்
- Reeba Jacobs
Comments
Post a Comment