என் ராஜனே என் தேவனே
என் ராஜனே என் தேவனே
எனக்காக மண் மீது வந்தீரைய்யா - 2
உன்னதத்தில் மகிமையும்
பூமியில் சமாதானமும்
மனிதர் மேல் பிரியமும் உண்டாகுமே - 2
ஆரி ராரோ ஆராரிரோ ஆரி ராரோ ஆராரிரோ - 2
1. வானத்தில் விண் தூதன் தோன்றிடவே
மேய்ப்பர்கள் கண்டு கலங்கினரே - 2
பயப்பட வேண்டாம் சந்தோஷ செய்தி
தாவீதின் ஊரில் இரட்சகர் பிறந்தார்
- 2
ஆரி ராரோ ஆராரிரோ ஆரி ராரோ ஆராரிரோ - 2
2. கண்ணே என் மணியே நீ கண் தூங்கிட
கானங்கள் நான் பாடி தாலாட்டவா - 2
மண்ணோரின் பாவம் போக்கிட வந்தாய்
மன்னாதி மன்னவா கண்ணுறங்கு - 2 - என் ராஜனே
- Dr. K. I. P. Brighton Joel
Comments
Post a Comment