21 November 2025

இயேசென்று பெயரிடுங்கள்

இயேசென்று பெயரிடுங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

இயேசென்று பெயரிடுங்கள்

ஏனெனில் பாவம் நீக்கி இரட்சிப்பவர் அவர் - 2

 

1. உன்னத ஆவி உலகினில் இறங்கி - (2)

கன்னியாம் மரியிடமாய் நிழலிட

கர்த்தனும் அவதரித்தார் - இயேசென்று

 

2. விண்ணை வெறுத்த இம்மானுவேலன் - (2)

தன்னையே தாழ்த்தினவராய் தயாபரன்

மண்ணிலே அவதரித்தார் - இயேசென்று

 

3. சாந்தம் மனத்தாழ்மை இலங்கிடும் இயேசுவின் - (2)

இன்ப நுகம் சுமப்போம் ஜீவியத்தில்

இயேசுவை தரித்து கொள்வோம் - இயேசென்று

 

4. நோய்பிணி பேய்திரை யாவுமழிக்கும் - (2)

சாய்ந்திளைப்பாறிடுவோம்

அவர் நாமத்தில் வாய் திறந்தார்ப்பரிப்போம் - இயேசென்று

 

5. வணங்குவார் யாவரும் வானிலும் பூவிலும் - (2)

முடங்குமே முழங்கால் யாவும் இயேசுவின் முன்னால்

நடுங்கும் நானிலம் முழுவதும் - இயேசென்று

 

 

- திருமதி. வைலட் ஆரோன்

 

 

YouTube Link

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...