உம்மை துதிக்கிறோம் தேவனே
உம்மை
துதிக்கிறோம்
தேவனே
நீர்
ஒருவரே பரிசுத்தர்
உம்மை
உயர்த்துவோம்
ராஜனே
நீர்
ஒருவரே உன்னதர்
- 2
ஒன்று
கூடி ஆராதிக்க
ஓடி வந்தோமே
உம்
நாமம் உயர்த்திட
பாட வந்தோமே - 2
1. ஜீவனுள்ள
நாட்களெல்லாம்
உம்மை ஆராதிப்போம்
ஜீவன்
பிரிந்து சாட்சியாய்
மரித்து பரலோகில்
ஆராதிப்போம்
எத்தனை
சபைகளை தடுத்தாலும்
எழும்பி
உமக்காய் ஜொலித்திடுவோம்
எத்தனை
ஏரிகோக்கள் எழும்பினாலும்
துதித்தே
மதிலை உடைத்திடுவோம்
எங்கள்
சபையோராய் உம்மை
துதிக்கின்றோம்
ஒரு
மனதாய் உம்மை உயர்த்துகிறோம்
- 2
2. இஸ்ரவேலை
காக்கும் தேவன்
உறங்குவதில்லை
உமது
சித்தம் இல்லாமல்
ஒருவரும் எங்களை
தொடுவதில்லை
அக்கினி
சூளையும் குளிர்ந்திடுதே
உம்மோடு
நாங்கள் நடக்கும்
போது
சிங்கமும்
சிறு பிள்ளை ஆகிடுதே
உமக்காய்
நாங்கள் வாழும்போது
எங்கள்
சபையோராய் உம்மை
துதிக்கின்றோம்
ஒரு
மனதாய் உம்மை உயர்த்துகிறோம்
- 2
3. யார்
என்ன சொன்னாலும்
யார் எதிர் நின்றாலும்
உம்மை ஆராதிப்போம்
சிவந்த
சமுத்திரம் சிறையின்
கதவுகள் எங்களை
தடுப்பதில்லை
கடலின்
கரையில் எங்கள்
பெயர்
எழுதி
இருந்தால் அழிந்திருப்போம்
உமது
கரத்தில் வரைந்ததினால்
இன்றும்
உயிரோடு துதிக்கின்றோம்.
எங்கள்
சபையோராய் உம்மை
துதிக்கின்றோம்
ஒரு
மனதாய் உம்மை உயர்த்துகிறோம்
- 2
- Bro. J.T. Prince
PDF பாடல்
புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment