முன்பனி குளிர்காலம் முன்ணணையிலே

முன்பனி குளிர்காலம் முன்ணணையிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

முன்பனி குளிர்காலம்

முன்ணணையினிலே

மன்னவர் நம் இயேசு

மனுவில் வந்தாரே - 2

 

அதிசயம் ஆ அதிசயம்

ஆனந்தம் பேரானந்தம் - 2

 

1. மாளிகை இருந்தும்,

மணி மாடங்கள் இருந்தும்

ராஜ்யம் ஆளும் குடும்பங்கள் ஆயிரம் இருந்தும் - 2

ஆடம்பரமில்லா கன்னியின் வயிற்றில்

ஆவியில் கருவாகியே கருணாகரன் பிறந்தார் - 2 - முன்பனி

 

2. ஸ்ரிஷ்டிகர் நமக்கு, எத்தனை வசதி

நாம் பிறக்கையிலே நமக்கென நாயகன் கொடுத்தார் - 2

தாம் பிறக்கையிலோ, தமக்கென எதுவும்

வசதிகளற்ற மாட்டுக்குடிலில் ஸ்ரிஷ்டிகர் பிறந்தார் - 2 - முன்பனி

 

3. எத்தனை பெரிய, ஆண்டவர் அவரே

இத்தனை எளிதாய், மகிமைகள் அத்தனை துறந்து - 2

கந்தையில் கவினாய், கடுங்குளிர் வெளியில்

வார்த்தை என்பவர், இயேசு என்கிற, நாமத்தில் பிறந்தார் - முன்பனி

 

 

- Robert Paul (Saravanan)

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே