யூதருக்கு ராஜாவாக பிறந்தவர் எங்கேயோ

யூதருக்கு ராஜாவாக பிறந்தவர் எங்கேயோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

யூதருக்கு ராஜாவாக பிறந்தவர் எங்கேயோ

மானிடருக்கு மீட்பராக வந்தவர் எங்கேயோ - 2

அவர் எங்கே என்று என் மனம் தேடுதே

அவர் யாரோ என்று என் மனம் அலையுதே

 

ஏழைக் கோலமாய், பெத்லகேமிலே

கந்தை கோலமாய், முன்னணையிலே - 2

 

1. மேசியா இவர்தானோ

என்னை மேய்த்திடும் நரர் கோனோ

வந்தவர் இவர்தானோ

இவர் யாரோ யாரோ யாரோ - 2

விண்மீன்களும் வியந்து பார்க்கவே

விண்ணரசனை பார்த்து இரசிக்கவே

விண்தூதர்கள் வாழ்த்துரைக்கவே

தாவீதின் ஊரிலே ஈசாயின் வேரிலே ஜெனித்தார் - யூதருக்கு

 

2. இரட்சகர் இவர்தானோ

என்னைத் தேடும் அன்பு ஏனோ

ஜெயித்தவர் இவர்தானோ

இவர் யாரோ யாரோ யாரோ - 2

 

மாந்தர் யாவர்க்கும் சந்தோசமே

மன்னன் வந்ததால் கொண்டாட்டமே

மன்னின் மீதினில் சமாதானமே

தாவீதின் ஊரிலே ஈசாயின் வேரிலே ஜெனித்தார் - யூதருக்கு

 

- Aswin S.A.

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே