மலர்கள் மலருதே பனியும் பொழியுதே
மலர்கள் மலருதே
பனியும் பொழியுதே
தொழுவம் ஒளிருதே
இதயம் குளிருதே
1. மரியின் மடியில் மழலை
இது ஓர் அதிசயம்
குளிரும் குடிலில் இறைவன்
மறையின் இரகசியம்
பூங்குடிலில்
ஓர் புல்லணையில்
தாய் மடியில் ஓர் பின்னிரவில்
யாரோ (3) ராரீராரீராரோ
2. புதுமை மலரும் வசனம்
புதிய வேதமே
இனிமை கமழும் குடிலில்
வானின் கீதமே
ஆ தொழுவில் வான் தூதர்களே
இராப்பொழுதில் பொன் ராகங்களே
யாரோ (3) ராரீராரீராரோ
3. மழைப்போல் அருளும் பொழியும்.
இது தான் வானிலை நதிப்போல்
கிருபை வழியும்
இது தான் சூழ்நிலை
மாதிரளாய் விண் சேனைகளோ
தேன்குரலில் பொன் வீணைகளோ
யாரோ (3) ராரீராரீராரோ
- Dr. V.C. Amuthan
Comments
Post a Comment