மேகமீதினில் இயேசுராஜன் வேகம்வரும் நாள்
மேகமீதினில்
இயேசுராஜன்
வேகம்வரும்
நாள்
அதிவேகம்
நெருங்கிடுதே
அனுபல்லவி
ஆத்துமாவே
நீ ஆயத்தமா?
இதோ மணாளன்
வேகம் வாராரே
சரணங்கள்
1. சோதனை
யாலுள்ளம்
சோர்ந்திடாதே
சோதனை
வென்றவர் ஜெயமளிப்பார்!
பாடுபலபட்டோர்க்கு
பலனளித்திடவே
பரன்
இயேசு வேகம் வாராரே
- மேகமீதினில்
2. நித்திரை
மயக்கத்தில் ஆழ்ந்திடாதே
நித்தமும்
ஆயத்தமாயிருப்பாய்
எண்ணெயுள்ள
தீவட்டியாய்
எழும்பிப் பிரகாசித்தால்
உன்னை
தன்னோடு சேர்த்துக்கொள்வார்
மேகமீதினில்
3. அசதியாய் ஜீவித்தால்
கைவிடுவார்
ஆண்டவர்
வரும் நாளில் புலம்பிடுவாய்
விழிப்புடன்
ஜெபமதில்
புதுபெலனடைந்தால்
அவர்
வரும் நாளில் எழும்பிடுவாய்
- மேகமீதினில்
4. பரிசுத்தாவியின்
நிறைவுடனே
பரிசுத்த
ஜீவியம் நிலைத்திடவே
கற்புள்ள
கன்னிகையாக
நீயும் இருந்தால்
மறுரூபம்
அடைந்திடுவாய்-நீயும்
- மேகமீதினில்
5. அகோர சிலுவையில்
தொங்கினவர்
ஆகாய
மீதினில் தோன்றிடுவார்
பாடுகளின்
பலனை கட்டியணைத்திடவே
பாடு
பட்டோரை மீட்க
வாராரே - மேகமீதினில்
Comments
Post a Comment