04 November 2025

ஒரு ரோஜா மலர் இயேசு ராஜாவாக

ஒரு ரோஜா மலர் இயேசு ராஜாவாக

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    ஒரு ரோஜா மலர் இயேசு ராஜாவாக

                        சாரோனின் ரோஜா மலர் இயேசு ராஜாவாக

                        பெத்தலையில் பிறந்துவிட்டார்

                        அதனால் எங்கள் உள்ளம் இன்பம் பொங்குதே

                        எங்கள் இல்லம் மகிழ்ச்சி பொங்குதே - சாரோனின்

 

1.         முட்செடியில் அக்கினியாய் பூத்த மலர் இது

            பொற்கிரீடம் சூழ்ந்து நம்மைக் காத்த மலர் இது - 2

 

                        இது வாடா மலர் வண்ணத்தில தாமரை மலர் - (2)

                        என்றும் வாசனையே குறைந்திடாதவர்

                        தமது வார்த்தையினால் ஜீவன் தருபவர் - (2)

 

2.         கண்ணீரை துடைக்க வந்த கருணை மலர் இது

            தமதன்பால் கவர்ந்துக் கொள்ளும் காந்த மலர் இது - 2

 

                        இது வாடா மலர் வண்ணத்தில தாமரை மலர் - (2)

                        என்றும் வாசனையே குறைந்திடாதவர்

                        தமது வார்த்தையினால் ஜீவன் தருபவர் - (2)

 

3.         பள்ளத்தாக்கல் பூத்துக் குலுங்கும் லீலி மலர் இது

            பாவ சாபம் நீக்க வந்த சிலுவை மலர் இது - 2

 

                        இது வாடா மலர் வண்ணத்தில தாமரை மலர் - (2)

                        என்றும் வாசனையே குறைந்திடாதவர்

                        தமது வார்த்தையினால் ஜீவன் தருபவர் - (2)

 

 

- Pr. David SS

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...