03 November 2025

என் கர்த்தர் எனக்கு செய்த மா நன்மைகள்

என் கர்த்தர் எனக்கு செய்த மா நன்மைகள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   என் கர்த்தர் எனக்கு செய்த மா நன்மைகள்

                        எண்ணில் அடங்காது

                        என் தேவன் எனக்குத் தந்த ஆசீர்வாதங்கள்

                        விவரிக்க முடியாது

 

1.         சென்ற ஆண்டு முழுவதிலும்

            என்னை தேவன் நடத்தினாரே - 2

            புது வருடத்தைக் காணச் செய்தார்

            நம்மை என்றும் மகிழச் செய்வார் - 2

 

            கர்த்தர் பெரியவரே என்றும் உயர்ந்தவரே

            வழி நடத்தும் தளபதியே

            கர்த்தர் பெரியவரே என்றும் உயர்ந்தவரே

            என்னை என்றும் நடத்தும் தளபதியே

 

                        புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி

                        உளமாற வாழ்த்துகிறோம் - 2 - என் கர்த்தர்

 

2.         நான் தளர்ந்த நேரங்களில்

            என்னைத் தூக்கிச் சுமந்தாரே - 2

            இருள் சூழ்ந்த காலங்களில்

            ஒளியாக இருந்தாரே - 2

 

            அவர் பரிசுத்தரே பாரில் சிறந்தவரே

            என்னை நேசிக்கும் நல் நேசரே

            அவர் பரிசுத்தரே பாரில் சிறந்தவரே

            என்னை என்றும் நேசிக்கும் நேசர் அவர்

 

                        துதி கீதங்களால் புகழ்வேன்

                        திரு நாமத்தை ஆராதிப்பேன் - 2 - என் கர்த்தர்

 

3.         அவர் சீக்கிரம் வருகின்றார்

            நம்மை அழைத்துச் சென்றிடவே - 2

            மோசேயின் ஆட்டுக்குட்டியின்

            வெற்றிப் பாடலைப் பாடிடுவோம் - 2

 

            நித்திய ராஜ்யத்திலே இயேசு உடனிருப்போம்

            இனி என்றுமே என்றென்றுமே

            நித்திய ராஜ்யத்திலே இயேசு உடனிருப்போம்

            இனி என்றுமே என்றுமே என்றென்றுமே

 

                        நாம் பாடி மகிழ்ந்திடுவோம்

                        இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவோம் - 2 - என் கர்த்தர்

 

 

- Pr. Edward Durisamy

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...