03 November 2025

நன்மைகளும் சகல கிருபைகளும்

நன்மைகளும் சகல கிருபைகளும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நன்மைகளும் சகல கிருபைகளும்

            அநுக்கிரகம் செய்வீரப்பா - 2

            ஆசீர்வாதமும் ஐஸ்வர்யமும்

            அருளும் தகப்பன் நீரல்லவோ - 2

 

                        மகிழ்ந்திருக்க நான் சுகித்திருக்க

                        வாழ்நாளெல்லாம் அமைதி பெற

                        மகிழ்ந்திருக்க நான் சுகித்திருக்க

                        வாழ்நாளெல்லாம் மன அமைதி பெற

                        அநுக்கிரகம் செய்வீரப்பா

                        என் வாழ்வில் அநுக்கிரகம் செய்வீரப்பா - (2)

 

1.         காத்திருக்கும் காலங்களை

            கணக்கில் வைக்கும் கர்த்தர் நீரே - 2

            தாமதித்த தரிசனங்கள்

            தீவிரமாய் நிறைவேற்றுவீர் - 2 -  மகிழ்ந்திருக்க

 

2.         கண்ணீர் கவலை கஷ்டங்களை

            மாற்றி என்னை துதிக்க வைப்பீர் - 2

            திகைத்து நிற்கும் சூழ்நிலையில்

            தேடி வந்து உதவி செய்வீர் - 2 - மகிழ்ந்திருக்க

 

3.         நானும் எந்தன் வீட்டாருமோ

            உந்தன் தயவை கொண்டாடுவோம் - 2

            லேவியருக்கும் எளியோருக்கும்

            கொடுக்கும் பங்கை கொடுக்க செய்வீர் - 2 - மகிழ்ந்திருக்க

 

 

- Augustin Rajasekar

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...