என்
நேசர் வலக்கரத்தில்
பிடித்தென்னை
நடத்துகின்றார்
தினந்தோறும்
சந்தோஷ
வேளையில் சஞ்சல
வேளையில்
என்னை கைவிடாமல்
தாங்கிக்கொள்வார்
- 2
கலங்குவதில்லை
நான் கலங்குவதில்லை
நான்
வருத்தங்கள்
அனேகம் வாட்டினாலும்
விழுவதுமில்லை
நான் விழுவதுமில்லை
நான்
சபலம்
அநேகம் வந்திட்டாலும்
என்
கர்த்தர் தங்குவார்
என் மேய்ப்பர்
போஷிப்பார்
என்
நாதர் நடத்துவர்
இறுதிவரை - 2
1. செங்கடல்
எதிராய் சீறி நின்றாலும்
சத்ருக்கள்
பின்னால் நெருக்கினாலும்
செங்கடல்
நடுவே செம்மண்
பாதை அமைத்து
அக்கறை
சேர்ப்பார் ஜெயத்துடன்
- 2 - கலங்குவதில்லை
2. அக்கினி
சூளை எதிராய் எரிந்தாலும்
சாத்ராகை
போலே நான் தள்ளப்பட்டாலும்
என்னுடன்
கூடவே சூளையில்
இறங்கி
வெந்திடாமல்
நேசர் விடுவிப்பார்
- 2 - கலங்குவதில்லை
3. கர்ச்சிக்கும்
சிங்கங்கள் வசிக்கும்
குகையில்
தனியேலை
போல் தள்ளப்பட்டாலும்
சிங்கத்தை
சிருஷ்டித்த என்
அன்பு நேசர்
கண்மணி
போல் என்னை காத்திடுவார்
- 2 - கலங்குவதில்லை
4. கேரித்து
நீரோடை வரண்டு
போனாலும்
காகத்தின்
வருகை நின்று விட்டாலும்
சாரிபாத்
மூலமாய் எலியாவை
போஷித்தார்
என்
கர்த்தர் என்னையும்
போஷிப்பாரே - 2 - கலங்குவதில்லை
5. மண்ணோடு
மண்ணால் நான் அமிழ்ந்து
போனாலும்
என்
நேசர் இயேசு கைவிடாரே
என்னை உயிர்பிப்பார்
விண் சரீரத்துடன்
சேர்த்துக்கொள்ளுவார்
என்னை மகிமையில்
- 2 - கலங்குவதில்லை
- Thomas Mathew Karunagapally
No comments:
Post a Comment