யாருண்டு யாருண்டு உம்மைப் போல
யாருண்டு
யாருண்டு உம்மைப்
போல
என்னையும்
நேசித்திட
இயேசு தேவா 2
என்னுள்ளம்
பொங்கிடுதே
உம் அன்பை
நிணைக்கையிலே
1. அள்ளி அள்ளி
அணைப்பதில்
அன்னை நீங்க
தூக்கி
என்னை சுமப்பதில்
தந்தை நீங்க
வாரி வழங்குவதில்
வள்ளல் நீங்க
என்னை வாழ
வைப்பதில் மன்னன்
நீங்க
2. அதிசயம்
செய்வதில் உம்மைப்
போல
அகிலத்தில்
யாருண்டு என் தேவனே
தாலாட்டி
மகிழ்வதில்
உம்மைப் போல
தரணியில்
யாருமில்லை என்
நேசரே
3. பாவி என்னை
பரலோகில் சேர்த்திடவே
பரமனே உம்
ஜீவன் தந்தீரய்யா
பரிசுத்த
இரத்தம் எனக்காய்
சிந்தி
பரிசுத்தமாய்
என்னை மாற்றினீரே
Comments
Post a Comment