மேலோக ராஜன் வருங்காலமாகுது

மேலோக ராஜன் வருங்காலமாகுது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

236. இராகம்: ஆங்கிலம் தாளம்: ஆதி

 

1. மேலோக இராசன்வருங் கால மாகுது

சாலோக மகிமை பெறலாம் - பாவி யோடிவா.

 

2. பாவம் நித்தமும் மனம் நோகச் செய்யுது

பரிசுத்தர் இத்த லத்தில் வந்தால் - கவசந் தரிப்போம்.

 

3. இரவு போயிற்று பகல் சமீப மாயிற்று

இருளின் செய்கை தள்ளி ஒளியின் - கவசந் தரிப்போம்.

 

4. குடிவெறி வேண்டாம் கோள்குண்டணி வேண்டாம்.

பகலின் பிள்ளைகள் போல் சீராய் - நடக்கக் கடவோம்.

 

5. எருசலேம் நகர் மகா அரசர் மாளிகை - அதை

ஏறிட்டுக் கண்ணாலே பார்த்தால் - ஏக்கம் தீருமே

 

6. தூதர் சேனைகள் துதி பாடும் ஓசையால் - இப்

பூதலம் திடுக்கிட - வானோர்கள் மகிழ்வார்.

 

7. உப்பார்சின் தங்கக் கச்சை இடையிற் கட்டியே

உம்பர்கள் ஒழுங் காக நின்று - கீதம் பாடுவார்.

 

8. ஆசனங்களில் இயேசு தாசரிருப்பார் - அதின்

மத்தி யிலோர் ஆசனம் - இம் மானுவேலர்க்கு.

 

9. ஏழுடுகையில் மார்ப ருகே பொற் கச்சை

வெண் பஞ்சு நிறமாம் சிரசு - இயேசுவுக்குண்டு.

 

10. பார்க்கக் கூடாத பரிசுத்த சோதியாய் - மே

லோக இராசன் வீற்றிருப்பார் - தூதர்கள் சூழ.

 

11. கேரூபின்களும் வானில் சேராபீன்களும் - கெம்

பீரமாய் முழங்கும் ஓசை - கேட்டு மகிழ்வார்.

 

12. சேனையின் தேவன் பரி சுத்தர் சுத்தரே - என்

றோய்வில் லாமல் நான்கு சீவன் - போற்றி நிற்குமே.

 

13. காலம் போகுது பகலோன் வருகிறார் - பல

மாகவே உன் இரட்சிப்பை நீ-தேடிக் கொண்டிரு.

 

14. பரிசுத்தரைக் காண வெகு சுத்தம் வேண்டுமே

திரு இயேசுவே உம் இரத்தத்தாலே - சுத்த மாக்குமே.

 

15. தோத்திரம் சொல்வேன் மிகத் தோத்திரம் சொல்வேன்

பிதாவுக்கும் சுதன் ஆவிக்கும் தோத்திரம் சொல்வேன்.

 

 

https://www.youtube.com/watch?v=1q6tu1-rzkI

YouTube Link

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே