அந்நாளிலே நாசரேத்திலே
வானதூதரின்
வாழ்த்து கேட்டதே - 2
அருள்மிக
பெற்ற மரி வாழ்க வாழ்கவே
ஆண்டவரின்
ஆசி அருள் உன்மேல் உள்ளதே - 2
கன்னி
மரியவள் அஞ்சி நின்றாரே
ஆண்டவர்க்கு
நான் அடிமை என்றாரே - 2
ராஜாதி
ராஜன் தேவாதி தேவன்
இம்மானுவேல்
பிறந்துள்ளார் - 2 - அந்நாளிலே
1. அந்நாளிலே
பெத்தலகேமிலே
ஊர் தூங்கிடும்
ராப்பொழுதிலே - 2
விண்ணுலகும்
மண்ணுலகும் வியந்துப் போனதே
விண்ணை
ஆளும் வேந்தன் இங்கு கன்னி மடியிலே - 2
வானதூதரின்
பாட்டு கேட்குதே
ஆயர் கூட்டமும்
கண் விழித்ததே - 2
ராஜாதி
ராஜன் தேவாதி தேவன்
இம்மானுவேல்
பிறந்துள்ளார் - 2 - அந்நாளிலே
அந்நாளிலே
பெத்தலகேமிலே
ஊர்
தூங்கிடும் ராப்பொழுதிலே
2. அந்நாளிலே
வானம் மீதிலே
விண்மீன்
ஒளி வீசுகின்றதே - 2
வானில்
அந்த நட்சத்திரம் கண்ட ஞானிகள்
கன்னிமரி
பாலகனை தேடி வந்தாரே - 2
பொன்னும்
வெள்ளியும் வெள்ளைப்போளமும்
தந்து
வணங்கியே பணிந்து நின்றாரே - 2 - ராஜாதி
- PHILIP VARGHESE
No comments:
Post a Comment