ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன் அலங்கம் இடியும் வரை
ஆராதிப்பேன்
ஆர்ப்பரிப்பேன்
அலங்கம் இடியும்
வரை
ஸ்தோத்தரிப்பேன்
துதிப்பாடுவேன்
எதிரிகள் மடியும்
வரை - 2
ஓயாமல்
நான் துதித்திடுவேன்
தூதன்
இறங்கும் வரை
சோராமல் நான்
ஜெபித்திடுவேன்
கேட்டது
கிடைக்கும் வரை
- ஆராதிப்பேன்
1. படை
பலங்கள் எனக்கு
தேவையில்லை
படைத்தலைவர்
எந்தன் இயேசு உண்டு
- 2
போராயுதம்
எனக்கு தேவையில்லை
மாறாத
தேவன் இயேசு உண்டு
- 2 - ஆராதிப்பேன்
2. அலை
கழிக்கும் எந்த
நிலைகளிலும்
வழி
நடத்த எந்தன் இயேசு
உண்டு - 2
சீராக்கி
என்னை ஸ்திரப்படுத்தும்
தூயாவியின்
அபிஷேகம் உண்டு
- 2 - ஆராதிப்பேன்
- Pastor. John Mani Varman
Comments
Post a Comment