03 November 2025

வாழ்த்துவோம் ஒன்றாய் கூடி வாரீர்

வாழ்த்துவோம் ஒன்றாய் கூடி வாரீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                             பல்லவி

 

          வாழ்த்துவோம் ஒன்றாய் கூடி வாரீர்

            Happy New Year என்று பாடி

            Happy New Year Happy New Year

 

                             சரணங்கள்

 

1.         வானம் பூமி யாவும் இங்கே

            வாழ்த்தட்டும் சேர்ந்தே Happy New Year

            தேவன் நமக்குத் தந்த நாட்கள்

            யாவும் இங்கு ஆசீர்வாதம்

            ஆத்ம ராகம், ஆனந்த கீதம்

            நாட்களெல்லாம் கேட்கட்டுமே

            ஆண்டவன் புகழை அன்பின் நிழலை

            அவனி எங்கும் பரப்பட்டுமே - வாழ்த்துவோம்

 

2.         பழையன கழிதல் புதியது புகுதல்

            இயற்கை தந்த சீதனமே

            பகைமை ஒழித்து பண்பை வளர்த்தல்

            அன்பின் இறைவன் பாசுரமே

            உழைப்போர் உயர உண்மைகள் மிளிர

            உலகம் விரிந்து செழிக்கட்டுமே

            உன்னதன் இயேசு அரசில் நாமும்

            உயர வழிகள் திறக்கட்டுமே - வாழ்த்துவோம்

 

3.         வல்லவன் தேவன் மகிமை நாதன்

            வல்லமையாற்றல் நிறையட்டுமே.

            வாழ்க்கையில் வெற்றி தோல்விகள் யாவிலும்

            வானவன் துணை தான் ஒளிரட்டுமே

            பூத்தது புதிய ஆண்டிது நமக்காய்

            பூபாலம் பாடி வரவேற்போம்

            காத்தவன் கருணை காவல் நிற்க

            Happy New Year பாடிடுவோம் - வாழ்த்துவோம்

 

 

- Dr. Maria William

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...