03 September 2024

வருசமெல்லாம் தேசத்தின் மேலே

வருசமெல்லாம் தேசத்தின் மேலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                        வருசமெல்லாம் தேசத்தின் மேலே

                        கர்த்தரின் கண்கள் வைக்கப்பட்டிருக்கும் - 2

                        பூர்வ நாட்களில் நினையுங்கள்

                        தலைமுறை தலைமுறையாய்

                        சென்ற வருசங்களைக் கவனித்து

                        சிந்தித்துப் பாருங்கள்

 

                                    உன் தகப்பனைக் கேள் அறிவிப்பான்

                                    உன் மூப்பர்களைக் கேள் சொல்வார்கள் - 2

 

                        வஸ்திரம் பழையதாகவில்லை

                        நம் கால்களை எதுவும் தீண்டவுமில்லை - வருசமெல்லாம்

 

1.         மீதியானியர் அமலேக்கியரும்

            இனி உன் நிலங்களை

            கெடுத்துப்போடுவதுமில்லை

            பூச்சிகளும் பட்சிகளும்

            உன் தானியத்தை

            பட்சிப்பதுமில்லை

            பர்வதங்கள் எருசலேமை சுற்றிலும்

            இருக்குமாற்போல் இதுமுதல் என்றென்றைக்கும்

            கர்த்தர் இது முதல் என்றென்றைக்கும்

            தம்முடைய ஜனத்தை சுற்றிலும் இருக்கிறார் - உன் தகப்பனைக்

 

2.         சிறுமைப்பட்ட நாட்களுக்கு

            நுகத்தை கண்ட வருசங்களுக்கு

            சரியாய் நம்மை மகிழ்ச்சியாக்குவார்

            சம்பூரணமாகச் சாப்பிட்டு

            திருப்தியடைந்து (யோவேல் 2:26)

            நம்மை நடத்தி வந்த தேவனைத் துதிப்போம்

            தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூறு

            கர்த்தர் பெரிய காரியங்கள் செய்திடுவார்

            கர்த்தர் தம்முடைய ஜனத்தை

            ஒருபோதும் வெட்கப்பட்டு

            போகச் செய்திடார் - வருசமெல்லாம்

 

 

https://www.youtube.com/watch?v=EDKgeqIk8i0

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...