ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வாழ வைப்பவரே எந்தன் சந்தோசமானவரே
- (2) - ஆவியானவரே
1. வறுமையில் வாடும்போது
உந்தன் கரம் என்னைத் தேற்றிடுமே
வெறுமையில் தவிக்கும்போது
உந்தன் கரம் என்னைத் தாங்கிடுமே
என்னை ஆட்கொண்டு வழிநடத்தி
உந்தன் சித்தம்போல் நடத்துமைய்யா
- 2 - ஆவியானவரே
2. சோதனை என்னைத் தாக்கும் போது
எனக்கு பெலன் தந்து காப்பாற்றினீர்
தனிமையான சூழ்நிலையில்
எனக்கு அமைதியை தந்தீரைய்யா
உந்தன் கிருபையை பொழிந்து
என்னை
உமது மகனாக ஏற்றுக் கொண்டீர்
- 2 - ஆவியானவரே
3. ஏக்கம் கொண்ட சூழ்நிலையில்
அன்பை பொழிந்து என்னை ஆட்கொண்டீரே
ஏமாற்றம் அடையும்போது
உலகம் இது என்று காட்டினீரே
உந்தன் அன்பொன்றே போதுமைய்யா
என்னை பரலோகில் சேர்க்கும்
ஐயா - 2 - ஆவியானவரே
Mr. N. Manoj Kumar
No comments:
Post a Comment