04 September 2024

நன்றி சொல்லி பாடிடுவேன் நன்மைகளின் நாயகரே

நன்றி சொல்லி பாடிடுவேன் நன்மைகளின் நாயகரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          நன்றி சொல்லி பாடிடுவேன் நன்மைகளின் நாயகரே

            எத்தனையோ நன்மைகளை எனக்கு செய்தீரே

            எல்லையில்லா கிருபையால் என்னை காத்து வந்தவரே

 

                        கையிலேயும் ஒன்னுமில்ல பையிலேயும் ஒன்னுமில்ல

                        ஆனாலும் உங்க கிருபை எனக்கு போதுமே

                        அனுதினம் உங்க தயவு எனக்கு வேணுமே - நன்றி சொல்லி

 

1.         கண்ணிருந்தும் குருடனாய் அலைந்து திரிந்தேனே

            கர்த்தர் உம்மை அறியாமல் வாழ்ந்து வந்தேனே - 2

            கல்வாரி இரத்தத்தினால் சொந்தமாக்கிக் கொண்டவரே - (2)

            கன்மலை தேனினால் என்னை திருப்தியாக்கினீரே

            கண்மணிப் போல் காத்து என்னை நடத்தி வந்தவரே - கையிலேயும்

 

2.         சொந்த பந்தங்கள் என்னை வெறுத்து விட்டாலும்

            உலக சொத்து செல்வங்கள் எனக்கு இல்லை என்றாலும் - 2

            சொந்தமாக்கத் தேடி வந்தீர் சத்தியத்தால் மீட்டுக் கொண்டீர் - (2)

            உங்க பிள்ளையாய் என்னை வாழ வச்சவரே

            உம்மையே உயர்த்தி தினம் பாடவச்சவரே - கையிலேயும்

 

3.         பெலத்த கரத்துல நானும் அடங்கியிருப்பேனே

            உங்க சொல்ல கேட்டு தா நானும் தினமும் நடப்பேனே - 2

            எண்ணில்லாத அதிசயம் என் வாழ்வில் செய்தவரே - (2)

            உங்க தோளில் சுமந்து என்னை காத்து வந்தவரே

            உங்க வார்த்த சொல்ல என்ன ஓட வச்சவரே - கையிலேயும்

 

 

- Pr. Jacob Arul

 

 

https://www.youtube.com/watch?v=Z6r6981zhaI

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...