இம்மட்டும் கிருபை தந்தவரே
நித்தமும் காத்தீரே
வறட்சியான காலங்களிலும்
செழிப்பாய் நடத்தினீரே - 2
என்னைக் கண்டவர் நீர்
என்னைக் காத்தவர் நீர்
எனக்காகவே யாவையும் செய்தவர்
நீர் - 2
நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா
1. அடிமையாய் போன தேசத்தில்
அதிபதியாய் என்னை உயர்த்தினீர் - 2
சிறுமை அடைந்த இடங்களில்
பலுகிப் பெருகச் செய்தீரே - 2 - என்னைக்
2. தீமை செய்ய நினைத்தவர் முன்
தலையை உயர்த்தி நடக்க வைத்தீர் - 2
வருத்தங்கள் யாவும் மறக்கப் பண்ணி
தீமையை நன்மையாய் முடிய செய்தீர் - 2
- என்னைக்
- Premkar Paul Singh
https://www.youtube.com/watch?v=fVPL0YH7h4M
No comments:
Post a Comment