06 August 2024

உம் நன்மைகள் ஆச்சரியம் எனக்கு

உம் நன்மைகள் ஆச்சரியம் எனக்கு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          உம் நன்மைகள் ஆச்சரியம் எனக்கு

            நீர் செய்ததை நினைக்கும் போது அதிசயம் எனக்கு - 2

 

                        என் ஆச்சரியமே என் அதிசயமே

                        என்னை படைத்த பிரமிப்பே நீர் எந்தன் சுவாசமே

                        என் ஆச்சரியமே என் அதிசயமே

                        என்னை படைத்த பிரமிப்பே நீர் எந்தன் சொந்தமே

 

1.         என் அழுகையின் கண்ணீரையும்

            ஆனந்த களிப்பாய் மாற்றினீரே

            என் வாழ்க்கையை நன்மையினால்

            முடிசூட்டி மகிழ்ந்தீரே - 2 - என் ஆச்சரியமே

 

2.         என்னை அழைத்தவர் நீரே என்னோடு இருப்பவரே

            என்னை உயர்த்தி மகிழ்ந்தீரே என் ஆத்துமா நேசரே

            என்னை வாழ வைப்பவரே என்னை நடத்தி செல்பவரே

            என் மனம் சோர்ந்தாலும் உன் நேசத்தால் தேற்றுவீரே  - என் ஆச்சரியமே

 

                        என் ஜீவ காலமெல்லாம் உன் கிருபை போதுமே

                        உம் மகிமையை பார்க்கணுமே

                        உம் பிரசன்னத்தில் மகிழணுமே

 

 

- Malar Balaji

 

 

https://www.youtube.com/watch?v=AjS1PcgF6wI

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...