நரம்பு
கூட இயேசுவுக்கு நன்றிசொல்லுது
- என்
என்
எலும்பு கூட இயேசுவுக்காய் நிமிர்ந்து நிற்குது
வயிறுகூட
இயேசுவுக்காய் பசியை தாங்குது
என் உயிரே இயேசுவே என்று சொல்லுது
1. கண்ணீரோடு கண்கள் அவரை நோக்கிப் பார்க்குது - என்றும்
நன்மை செய்த நல்லவருக்கு
நன்றி சொல்லுது
என் முழங்கால்கள்
மண்டியிட்டு தினமும் ஜெபிக்குது
-2
கண்ணீர் ஜெபம்
தேவன் கேட்பார் என்று நம்புது என் - நரம்பு கூட
2. என் ஆத்துமா கர்த்தருக்காய் காத்திருக்குது
தினம் நேர்த்தியாக
ஸ்தோத்திரங்கள் சொல்லி மகிழுது
என் இருதயமோ
இரவும் பகலும் விழித்திருக்குது
என் உறவே என்
மறைவிடமே என்று சொல்லுது - நரம்பு கூட
3. ஜீவன் தந்த தேவனுக்கே
நன்றி கூறுவேன்
என் ஆவி ஆத்மா சரீரம்
முழுவதும் அர்ப்பணிக்கிறேன்
இலக்கை நோக்கி ஜீவ
பயணம் தொடர்ந்து ஓடுவேன்
பரிசுத்தமாய் வாழ்ந்து தேவ ஊழியம் செய்வேன்
- நரம்பு கூட
- மோசஸ் ராஜசேகர்
https://www.youtube.com/watch?v=_u-vTZnbI0Q
No comments:
Post a Comment