நரனாம் எளியேன் நற்கதி சேர
86. இராகம்: சகான ஆதிதாளம்
திபதை-கண்ணிகள்
1. நரனாம்[1] எளியேன்
நற்கதி சேர,
பரனே, உன் அருள் செய், என் பவவினை தீர.
2. தரணியோர்க் காக நரர் உருத்
தரித்தாய்;
தகு நெறி விளக் கிட மிகவும் சஞ்சரித்தாய்.
3. இக பரம் அனைத்தும் வகையுடன் படைத்தாய்
எளியோர்க்கென்றாவின்
கொட்டில் வழிவரத் தொடுத்தாய்.
4. பாவிகள் உயிர்த்து ஜீவனைக்
கூட,
பரிவுடன் பாடடைந்தீர், திரு ரத்தம் ஓட.
5. இந்நிலத் தவர்க்காய் நல்நெறி முடிக்க,
இழிமரத்[2] தறையுண்டீ எழில் உடல் துடிக்க.
6. பாதகன் ஒருவன் தீதுணர்ந்
துருக
பரதீசில் அமைத்தீரே, அருள் மிகப் பெருக.
7. மரணத்தின் கூர்போய்
நரர் என்றும் நேரே,
வாழ்ந்து பரத்துறவே
ஆழ்ந்துயிர்த்[3] தீரே.
- ஜா.பா
Comments
Post a Comment