தேனிலும் தெளி தேன் பொன்னிலும்
பசும்பொன்
கர்த்தரின் வார்த்தை மாறாதது
தேனிலும் மதுரமாய் பொன்னிலும்
சுத்தமாய்
கர்த்தரின்
வார்த்தை தொனிக்கின்றது - 2
1. ஆழங்களில் இருந்த என்னை மதில்மேல் நிறுத்தி
வைத்தீர்
இருள் நிறைந்த உலகத்திலே வெளிச்சமாக தோன்றச்
செய்தீர்
வனாந்திரமே
வாழ்க்கையாக முட்ச்செடியாய் வளர்ந்து
நின்றேன்
ஒருவருமே காணா
என்மேல் அக்கினியாய் இறங்கி வந்தீர் - 2
நன்மையும் தீமையும் அறிய ஞானத்தை
பெறுகச் செய்தீர்
வார்த்தையின் வல்லமை அறிய
என்னோடு கலந்துவிட்டீர் - 2
வார்த்தையின்
மகிமையாய் என்னோடு கலந்துவிட்டீர் - தேனிலும்
2. பாவத்தின் சாயலாக நரகத்தின் வாசலில் நின்றேன்
உன் வாழ்க்கை என்னோடென்று
நித்தியத்தில் சேர்த்துக் கொண்டீர்
கண்ணீரின் பாதையிலே எதிர்காலம் தொலைத்து
நின்றேன்
கிருபையால் மீட்டெடுத்து சாட்சியாக நிற்கச்
செய்தீர் - 2
பாவமும் சாபமும் வெல்லும்
உரிமையை எனக்குத் தந்தீர்
வார்த்தையின் வல்லமை அறிய
என்னோடு கலந்துவிட்டீர் - 2
வார்த்தையின் மகிமையாய் என்னோடு
கலந்துவிட்டீர் - தேனிலும்
Bro. Allwin Sam
https://www.youtube.com/watch?v=JUL04UN76CY
No comments:
Post a Comment