நன்றி
சொல்லியே இயேசுவைப் பாடுவோம்
நன்மைகள்
செய்தாரே
ஏராளம்
கிருபை பொழிந்தாரே
துரோகி
என்னையே தூக்கி எடுத்து
தேற்றி
அணைத்தாரே
1. தனித்த
என்னையே அணைத்துக் கொண்டீரே
உம்மோடு
இணைத்தீரே பேரன்பினால்
ஆனந்தம்
தந்தீரே நன்றியால் பாடிடுவேன்
2. தாழ்ந்த
என்னையே தாங்கி வந்தீரே
ஆவியால்
நிறைத்தீரே
ஓ
கிருபையால் வரங்கள் ஈந்தீரே
நன்றியால்
பாடிடுவேன்
3. வஞ்சக
உலகில் நண்பனாய் வந்து
நேசத்தை
தந்தீரே
எந்நாளும்
மாறாமல் இருப்பீரே
நன்றியால்
பாடிடுவேன்
No comments:
Post a Comment