09 August 2024

நன்றி என்று சொல்லுவோம்

நன்றி என்று சொல்லுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நன்றி என்று சொல்லுவோம்

                   நல்ல தேவன் கிருபை செய்தார்

                        நன்மைகளை நினைத்துக் கொண்டு

                        நன்றியுள்ள துதியுடன்

                        நன்றி நன்றி நன்றி இயேசய்யா

 

1.         உங்க ஜீவனை தந்தீர் உமக்கு நன்றி அப்பா

            என் பாவத்தை சுமந்தீர் உமக்கு நன்றி அப்பா

            சாப நோய்களை எல்லாம் முறியடித்தீரே

            புது வாழ்க்கை தந்து

            நல்ல சந்தோஷம் தந்தீர்

 

2.         பெயர் சொல்லி அழைத்தீர் உமக்கு நன்றி அப்பா

            உங்க அன்பை அள்ளி தந்தீர் உமக்கு நன்றி அப்பா

            என்னை வாலாக்காமல் தலையாக்கினீர்

            என்னை கீழாக்காமல் மேலாக்கினீர்

 

3.         வெண்கல கதவுகள் உடைத்து விட்டீர்

            இரும்பு தாழ்பாள்கள் முறித்து விட்டீர்

            நல்ல பொக்கிஷங்களை நல்ல ஆசீர்வாதத்தை

            எனக்கு தந்தீர் அநாதி பாசத்தால்

 

4.         பரலோகத்தில் என்னை நீர் கொண்டு செல்லுவீர்

            பிதாவின் மகிமையில் என்னை உட்கார வைத்தீர்

            நோய்களும் இல்லை சாப பேயும் அங்கு இல்லை

            பரிசுத்த ஆவி உன்னை வழி நடத்திடுவார்

 

 

https://www.youtube.com/watch?v=vrYCZXksY2M

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...