நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா
நன்றி
இயேசு ராஜா
நன்றி
இயேசு ராஜா
1. கடந்த
நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
புதிய
நாளை தந்தீரே நன்றி ராஜா
2. ஆபத்திலே
காத்தீரே நன்றி ராஜா
அதிசயம்
செய்தீரே நன்றி ராஜா
3. வாழ்க்கையிலே
ஒளி விளக்காய் வந்தீரையா
வார்த்தை
என்ற மன்னாவை தந்தீரையா
4. அடைக்கலமே
கேடயமே நன்றிராஜா
அன்பே
என் ஆறுதலே நன்றிராஜா
5. தனிமையிலே
துணை நின்றீர் நன்றிராஜா
தாயைப்
போல் தேற்றினீர் நன்றிராஜா
6. சோர்ந்து
போன நேரமெல்லாம் துக்கினீரே
சுகம்
தந்து இதுவரை தாங்கினீரே
7. புதுவாழ்வு
தந்தீரே நன்றிராஜா
புதுபெலன் தந்தீரே நன்றிராஜா
8. ஊழியம்
தந்தீரே நன்றிராஜா
உடனிருந்து
நடத்தினீரே நன்றிராஜா
- பெர்க்மான்ஸ்
https://www.youtube.com/watch?v=X63zaVg7Z3k
No comments:
Post a Comment