05 August 2024

நம்புகின்றாயா நம்புகின்றாயா கர்த்தரின்

நம்புகின்றாயா நம்புகின்றாயா கர்த்தரின்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          நம்புகின்றாயா நம்புகின்றாயா?

                        கர்த்தரின் புய

                        வலிமை ...யை ... நீ ..

 

            இளங்கிளையைப் போலவே

            வரண்ட நிலத்திலே

            துளிர்கிற வேர்ப்போல எழுந்து

            வருகிறார் - நம்பு

 

1.         புறக்கணிக்கப்பட்டுத் துயரம்

                        நிறைந்து

            பாடுகள் அனுபவித்தார்

                        அவரை விட்டு நமது முகங்களை

            நாம் மறைத்து

                        அவரை மறந்திருந்தோம்;

            அவர் மறக்கவில்லை - நம்பு

 

2.         மெய்யாய் அவர் நமது

                        பாடுகளை ஏற்றார்

            துயரங்களைச் சுமந்தார்

                        நம்முடைய பாவச்செயல்களை

            அவர் சுமந்தார்

                        அவரது தழும்புகளால் அமைதி

            பெறுகிறோம் - நம்பு

 

3.         ஆடுகளைப் போல வழி

                        தவறித் திரிந்து

            அவரவர் வழி போனோம்

                        கர்த்தரே நம்முடைய

            அக்கிரமங்களை எல்லாம்

                        அவர்மேல் விழச் செய்தார்

            அடியார்களைக் காத்தார் - நம்பு

 

4.         தமது ஆன்மாவை

                        மரணத்திலே ஊற்றித்

            தாமே பலியானார்

                        அவர் தமது ஆன்மா

            வருந்திய தோர் பலனை

            அவனியிலே காண்பார்

                        கண்டு மகிழ்ந்திடுவார் - நம்பு

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...