03 August 2024

நம்பி வந்தேன் இயேசுவே

நம்பி வந்தேன் இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நம்பி வந்தேன் இயேசுவே

                   என் ஜெபம் கேட்டு இரங்குவீர்

                        விண்ணப்பமும் வேண்டுதலை

                        கேட்டு பதில் செய்வீர்

 

1.         என் சத்தம் கேட்கும் வல்லவரே

            உருக்கமாக இரங்குவீர்

            உம்மையல்லாமல் யாருண்டு

            உந்தனின் பாதத்தை அண்டினேன்

 

2.         இடைவிடாமல் ஜெபித்திட

            தடைகள் யாவும் நீக்குவீர்

            சோர்ந்திடாமல் ஜெபித்திட

            ஜெபத்தின் ஆவியை நல்குவீர்

 

3.         ஊக்கமாய் நானும் ஜெபித்திட

            உன்னத ஆவி தந்திடுமே

            உந்தன் வாக்கை நம்பினேன்

            ஜெயமே அடைய செய்குவீர்

 

4.         தேவனே உந்தன் சமூகத்தில்

            கட்டுகள் யாவும் அறுந்திடும்

            ஏகசிந்தை நல்கியே

            அற்புதம் கண்டிட செய்குவீர்

 

5.         அழியும் மாந்தர் யாவரும்

            இயேசுவே உம்மை கண்டிட

            ஆத்மபாரம் நிறைந்துமே

            ஜெபிக்க கிருபை செய்குவீர்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...