03 August 2024

நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே

நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          நம்பிக்கை நங்கூரம்

            நான் நம்பும் தெய்வமே

            நம்பினோரைக் காக்கும் இயேசுவே

 

                        பரம பரிசுத்த தேவனை, பரலோக ராஜனை

                        பாடல் பாடி கொண்டாடிடுவோம் - 2

 

                        நம்பிக்கையும் நீர் தானே, நங்கூரமும் நீர் தானே

                        நாங்கள் நம்பும் தெய்வமும் நீர்தானே! - 2 நீர்தானே

 

1.         பார்வோனை வென்றவரை துதிப்போம்

            எகிப்தியரை வென்றவரைத் துதிப்போம் - ஆயிரம்

            பார்வோன்கள் வந்தாலும், எகிப்தியர் வந்தாலும்

            பாடல் பாடி முன்னேறிடுவோம் - நம்பிக்கை

 

2.         கன்மலையைப் பிளந்தவரைத் துதிப்போம்

            நீரூற்றைத் தந்தவரைத் துதிப்போம் - பஞ்சம்

            பட்டினியே வந்தாலும், வறட்சிகள் என்றாலும்

            பாடல் பாடி முன்னேறிடுவோம் - நம்பிக்கை

 

3.         கல்லறையைப் பிளந்தவரைத் துதிப்போம்

            மரணத்தை வென்றவரைத் துதிப்போம் - மரண

            இருளுள்ள பள்ளத்தாக்கின், சூழ்நிலைகள் வந்தாலும்

            பயமின்றி முன்னேறிடுவோம் - நம்பிக்கை

 

 

https://www.youtube.com/watch?v=U_R2peb52_4

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...