08 August 2024

நல்லவரே எங்கள் இயேசைய்யா

நல்லவரே எங்கள் இயேசைய்யா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நல்லவரே எங்கள் இயேசைய்யா

                        வல்லவரே எங்கள் இயேசைய்யா

                        ஆராதித்து ஆராதித்து மகிழ்ந்திருப்பேன்

                        ஆனந்த சத்தத்தோடு புகழ்ந்திடுவேன்

 

1.         பாவங்களை மன்னித்து என்னில் பாசம் கொண்டீரே

            பரிசுத்த பாதை தினம் நடத்துகின்றீரே

 

2.         ஒவ்வொரு நாளும் நன்மைகளை அள்ளித் தந்தீரே

            ஓயாமல் உம்மைப் பாட கிருபை தந்தீரே

 

3.         மாசற்ற அன்பினாலே அணைத்துக் கொண்டீரே

            மந்தையாம் சபைதனில் சேர்த்துக் கொண்டீரே

 

4.         பரிசுத்த ஆவியாலே நிறைத்து விட்டீரே

            பரலோக வாழ்வினிலே இணைத்து விட்டீரே

 

5.         நீதியின் வலக்கரத்தால் தாங்குகின்றீரே

            நித்தமும் நல் வழி நடத்துகின்றீரே

 

6.         புல்லுள்ள இடங்கள் மேய்க்கும் நல்ல மேய்ப்பரே

            அமர்ந்த தண்ணீரண்டை நடத்தும் நேசரே

 

7.         கிருபை வரங்களையும் எமக்குத் தந்தீரே

            கிருபாசனம் செல்ல தகுதி தந்தீரே

 

 

- Pastor. Alexander

 

 

https://www.youtube.com/watch?v=ADSg_Zu7_yo

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...