84. இராகம்: சங்கராபரணம். தாளம்: ஆதி.
பரி. பவுலின் திருநாள் - சனவரி 25ஆம் நாள்
“என்ன பாக்கியம்” - என்ற மெட்டு
பல்லவி
நல்ல
வாக்கியம் - நமக் குண்டு
இரட்சகர்
பாக்கியம்.
அனுபல்லவி
எல்லையில் லாத்தயை
எங்கும் நிறைந்தது
வல்ல பவுல்திரு
நாளுமே வந்தது -
நல்ல
சரணங்கள்
1. பவு லென்னும் நாமம் - பழைய பேர்
சவு லென்னும் கேமம்,
சிலி சியா நாடதில் சிறந்த தோர் தரிசுவில்
கலியுக யூதனாம்
கமாலியேல் சீடனாம் - நல்ல
2. மார்க்க விரோதி
- பரிசுத்த
வான்கள் குரோதி
ஆர்க்குமே அஞ்சாமல்
ஆச்சாரி யனிடம்
தீர்க்கமாய்
நிருபங்கள் மூர்க்கமாய் வாங்கினார் - நல்ல
3. ஆணென்றும் பாரான் - ஐயோ இது
பெண்ணென்றும்
ஓரான்
நானென்ற ஆணவனம் மிஞ்சித் தமஸ்குவும்
தோணவே வந்தவன்
துள்ளி விழுந்திட்டான் -
நல்ல
4. இயேசுவைக் கண்டான் - சுவாமியே
நீர்
யாரென்று கேட்டான்
மாசுகள் நீங்கிட மாறிக் குணப் பட்டான்
மேசியா நாமத்தை மெச்சிப்பிர
சங்கித்தான் -
நல்ல
5. புற சாதியாரும்
- வரத் தகாப்
புறக் கணிப் பாரும்
பரலோக வாழ்வதில்
பங்கு பெறுவாரென்ற
பரம இரகசியம்
பவுலுக்கு வெளியாச்சு - நல்ல
6. அன்புள்ள வசனம் - அனைவரும்
அறிந்திடத்
தவனம்
ஆசியா, ஐரோப்பா, அடுத்த பிரித் தானியா
அடங்கலும் சுவிசேடம் அறிவித்துச் சிறைப்பட்டான் - நல்ல
7. நியமங்கள் சுருதி
- பல பல
நிருபங்கள் எழுதி
நிந்தை யுபத்திரவம்
நெடுந்துன்பந் தான்பட்டு
நேரோ ராயனென்னும் நீசனால் மாண்டிட்டான் - நல்ல
8. திருச் சபை யோரே - சுவிசேடம்
செப்பிடு வீரே
பரிசுத்த பவுலைப்போல்
பலருமே குணப்பட்டு
தரிசித்து இயேசுவின் சரணம் புகுந்திடும் -
நல்ல
- S. உவால்டர்
கவிராயர், தென்மலை.
No comments:
Post a Comment