நல்ல விசேஷங் கேளுங்கோ
41. இராகம்: காம்போதி ஆதிதாளம்
பல்லவி
நல்ல
விசேஷங் கேளுங்கோ,-ஏசு
நாதன் திரு அவதாரம்
செய்த மகா
நல்ல விசேஷங்
கேளுங்கோ!
அனுபல்லவி
நல்ல
விசேஷம் இதுவாம், உலகில் சமஸ்த
நரர்க்கும்
சுரர்க்கும் பரத்தினில்
வல்லமை ஆதி[1] தன்
மைந்தனைத் தந்து,
மனிதரை ரட்சிக்க
மா அருள் கூர்ந்த இந் - நல்ல
சரணங்கள்
1. சொல்ல முடியா அன்பிதே-தம்
தொண்டரைப் போல்
பகையாளர் தம்பால் வைத்த-
சொல்ல முடியாத அன்பிதே;
அல்லல் அகற்றி அறிவில்லா
எங்களின்
ஆத்தும நேசர்
குழந்தையாக,
இல்லம் இல்லாமலே காலியின்[2] கொட்டிலிலே நரர்[3] ரூபமதாய்,
எல்லை இல்லான்
தந்தையாக இருக்க மா
ஏழை மனிதர் அனையுடன்
தந்தையாய்
தொல்லை அறுக்க என் றிங்கெழுந்தான்; மகா
சூட்சமதாகிய
மாட்சிமையாம் ஒரு - நல்ல
2. மாந்தர்க்க நல்ல
கால-மாம்;
மரண சாபத்துள்
அடைபட்டொடுங்கும்-மாந்தர்க்கு
சாந்தம், பொறுமை, சுகுணம்
அநேகம்,
சாற்றெளிதாமோ?
கிருபைப் பிரவாகம்,
வாய்ந்த நரர்
மீதில் அன்பு சொல்வென்றால்,
வானவர்க்கும்
அரிதே;
சேர்ந்து பணிந்து முழந்தாழ்ப்படி
இட்டு,
செப்புவோம்;
நம் ஏசு நாம் நடந்திடில்,
அன்பும் அருளும் அனைத்தும் உடன் உண்டாம்;
- நல்ல
- காபிரியேல் உபதேசியார்
Comments
Post a Comment