07 June 2024

என் தேவைகளை காட்டிலும்

என் தேவைகளை காட்டிலும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          என் தேவைகளை காட்டிலும்

          என் தேவன் பெரியவரே

            என் சூழ்நிலையை பார்க்கிலும்

            என் ரட்சகர் பெரியவரே

 

                        ஆராதிப்பேன், உம்மை ஆராதிப்பேன்

                        ஆராதிப்பேன், எந்தன் வாழ்நாளெல்லாம்

 

1.         தண்ணீரை ரசமாக மாற்றி,

            என் வெறுமையை நிறைவாக்கினீரே

            வெட்கத்தின் விளிம்பிற்கு சென்றும்,

            என்னை நிறைவோடு மீட்டெடுத்தீரே

 

2.         எதிரான சூழ்ச்சியை உடைத்தே,

            என் எதிரியை மேற்கொண்டீரே

            நான் தலை குனிந்த இடத்தில் எல்லாம்,

            என் தலை உயர்த்தி வைத்தீரே

 

3.         கோணலை நேராக மாற்றி,

            பள்ளத்தை மேடாக்கினீரே

            திறக்காத கதவுகள் எல்லாம்,

            உம் கிருபையால் திறந்திட்டதே

 

- Jacob Benny John

 

 

https://www.youtube.com/watch?v=-1TRnJ2NC-g

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...