தேவனே உமையான் மனமாறிப்பிறந்த
396.
இராகம்: லாவணி ஆதி தாளம்
கண்ணிகள்
1. தேவனே உமையான் மனமாறிப்பிறந்த
ஓர் சிறியகுழந்தையாகச்
சேர்ந்தேன்
எனக்காய் நீரே
எல்லாமும் செய்கிறீர்
தயவாக
2. ஆவியில்
வளர ஞானப்பாலூட்டி
ஆதரிப்பதை
மறக்கேன்;
அனுதினம்
நீதி ஆடையளிக்கும்
அருமையும்
நான் மறக்கேன்.
3. தாய்மகவணைத்துக்
காப்பதொப்பாகவே
தமியனைக்[1] காக்கின்றீர்,
தவறிவிழாமல்
கைதந்து தாங்கி
தயை மடிசேர்க்கின்றீர்.
- ரா. ஈஸ்வரபாக்கியம்
ஈசாக்கு
Comments
Post a Comment