12 June 2024

தேவனே என் தேவா

தேவனே என் தேவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                    தேவனே என் தேவா

                        உம்மை நோக்கினேன்

                        தண்ணீரில்லா நிலம்போல

                        தாகமாய் (உமக்காய்) ஏங்கினேன்


1.         ஒவ்வொரு நாளும் உம்பிரசன்னம்

            ஓடி வருகிறேன்

            உம் வல்லமை மகிமை கண்டு

            உலகை மறக்கின்றேன்

2.         ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை

            எனக்குப் போதுமே

            உதடுகளாலே துதிக்கின்றேன்

            உலகை மறக்கின்றேன்

3.         படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்

            இராச்சாமத்தில் தியானிக்கிறேன்

            உம் சிறகுகளின் நிழல்தனிலே

            உலகை மறக்கின்றேன்

4.         வாழ் நாளெல்லாம் உம்நாமம்

            வாழ்த்திப் பாடுவேன்

            சுவையான உணவை உண்பதுபோல்

            திருப்தி அடைகின்றேன்

5.         எனது ஆன்மா தொடர்ந்து உம்மை

            பற்றி கொண்டது

            உம் வலக்கரமோ என்னை நாளும்

            தாங்கிக் கொண்டது

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

https://www.youtube.com/watch?v=od_J_wpPkMM

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...