12 June 2024

தேவனே என் ஜீவனே எந்தன் கன்மலையே

தேவனே என் ஜீவனே எந்தன் கன்மலையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   தேவனே என் ஜீவனே எந்தன் கன்மலையே

                        இயேசுவே என் நேசரே

                        என்றுமாய் நம்புவேன் அல்லேலூயா 4

 

1.         தீமை ஏதும் சூழ்ந்திடா

            என்னைக் காக்கும் தெய்வமே

            சாபம் யாவும் நீக்கியே

            சாந்தியே நல்கிடும் - அல்லேலூயா 4

 

2.         என்னை முற்றும் தந்திட்டேன்

            கிருபை சூழ தாங்குவீர்

            எந்தன் மேன்மை நீரல்லோ

            இயேசுவே பின் செல்வேன்

 

3.         தாகம் தீர்க்கும் மீட்பரே

            எந்தன் வாஞ்சை நீரல்லோ

            உம்மைப் போல மாறிட

            இயேசுவே செய்திடும் - அல்லேலூயா 4

 

4.         உள்ளம் திறந்து வேண்டினேன்

            என்னை கேட்டு இரங்குவீர்

            தேவ நன்மை யாவையும்

            தேவனே நல்கிடும் - அல்லேலூயா 4

 

5.         பாரில் உம்மை தேடினேன்

            பயங்கள் யாவும் நீக்கினீர்

            தேவராஜ்யம் சேர்ந்திட

            இயேசுவே செய்திடும் - அல்லேலூயா 4

 

 

- Bro. M. Vincent Samuel

 

 

https://www.youtube.com/watch?v=BM5wUl6byRs

https://www.youtube.com/watch?v=a0IfkNDkGZQ

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...