12 June 2024

தேவனால் கூடாதது ஒன்றுமில்லையே

தேவனால் கூடாதது ஒன்றுமில்லையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   தேவனால் கூடாதது ஒன்றுமில்லையே

                   என் இயேசுவால் ஆகாததில்லையே

                        என் கர்த்தர் நல்லவர் என் தேவன் வல்லவர்

                        என் இயேசு பெரியவர் அவர் மிகவும் உயர்ந்தவர்

                        வல்லமையுடையவர் என்றும் மகிமை நிறைந்தவர்

 

1.         வற்றாத செங்கடலை பிளந்தவர் அவரே

            தம் ஜனத்தை காக்க கடலில் வழி திறந்தவர் அவரே

            வாழ வழி இல்லாதோரின் வறுமை நீக்கும் தெய்வமாம்

            இல்லையென்று ஏங்குவோர்க்கு அள்ளித் தரும் வள்ளலாம்

 

2.         விழி இழந்த குருடருக்கும் பார்வையைத் தந்தார்

            பாவ இருளினாலே இருப்பவர்க்கும் ஒளியினை தந்தார்

            வியாதியில் வாடுவோர்க்கு விடுதலை தரும் தேவனாம்

            வெற்றி வேந்தன் இயேசுவாலே கூடாதது இல்லையாம்

 

3.         உலர்ந்தது போன எலும்புகளில் உயிர்வாழச் செய்தார்

            பாவ உணர்வின்றி கிடப்பவரை உயிர்பெறச் செய்தார்

            பரிசுத்த ஆவியினால் பெலப்படுத்தும் தேவனாம்

            பக்தர்களின் பாதையில் தினம் அற்புதங்கள் செய்யும் தேவனாம்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...