தேவன் தந்த
வாழ்வல்லவா
அதை வேதனை
என்று சொல்லலாமா
தேவன் தந்த
வாழ்வல்லவா
அதை சோதனை
என்று பேசலாமா
சொல்லலாமா
நீங்க சொல்லலாமா
பேசலாமா
நீங்க பேசலாமா
1. தேவன்
தந்த மனைவியல்லவா-அவளை
அடிமையாக
நடத்தலாமா
உன்னை
நம்பி வந்த மானல்லவா
அவளை
கசந்து கசந்து
திட்டலாமா
நடத்தலாமா
அப்படி நடத்தலாமா
திட்டலாமா
கசந்து திட்டலாமா
2. தேவன்
தந்த கணவரல்லவா-அவரை
எதிரியாக
நினைக்கலாமா
பாசம்
நிறைந்த புருசனல்லவா-அவரை
எதிர்த்து
எதிர்த்து பேசலாமா
நினைக்கலாமா
அப்படி நினைக்கலாமா
பேசலாமா
எதிர்த்து பேசலாமா
3. தேவன்
தந்த பிள்ளை அல்லவா-அவனை
நாயைப்
போல விரட்டலாமா
வாரிசாக
வந்த செல்வமல்லவா-அவனை
பாசம்
இன்றி பார்க்கலாமா
விரட்டலாமா
அப்படி விரட்டலாமா
பார்க்கலாமா
இப்படி பார்க்கலாமா
விரட்டலாமா
பிள்ளைய விரட்டலாமா
பார்க்கலாமா
இப்படி பார்க்கலாமா
4. தேவன்
தந்த தாய் அல்லவா-அவரை
தனியே
ஒதுக்கி தள்ளலாமா
கனத்திற்குரிய
தந்தையல்லவா-அவரை
அற்பமாக
எண்ணலாமா
தள்ளலாமா ஒதுக்கி
தள்ளலாமா
எண்ணலாமா அற்பமாய்
எண்ணலாமா
5. தேவன்
தந்த அத்தையல்லவா-அவரை
இடைஞ்சல்
என்று வெறுக்கலாமா
ஆதரவான
மருமகள் அல்லவா-அவளை
குற்றப்படுத்தி
தூற்றலாமா
வெறுக்கலாமா
அத்தைய வெறுக்கலாமா
தூற்றலாமா
அவளை தூற்றலாமா
வெறுக்கலாமா
மாமியாரை வெறுக்கலாமா
தூற்றலாமா
மகளை தூற்றலாமா
https://www.youtube.com/watch?v=ytg27RuIqk0
No comments:
Post a Comment